பிரபல தொழிலதிபரை காதலிக்கும் சமந்தா- கசிந்த ரகசியம்

Image result for சமந்தா ACTORபாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார்.
பின் அவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனையால் காதல் முறிந்தது. இதை தொடர்ந்து சித்தார்த், சமந்தா இருவரும் சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் சமந்தா தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுகிறார்கள். விரைவில் இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

பெங்களூர் பள்ளியில் லட்சுமிமேனன் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்

Image result for LAKSHMI MENON ACTOR

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
சிப்பாய் மற்றும் கார்த்தியுடன் நடித்த கொம்பன் படங்கள் விரைவில் திரைக்கு வருகிறது. லட்சுமிமேனனுக்கு பூர்வீகம் கேரளா, எர்ணாகுளம் அருகில் உள்ள திருப் புணித்துரா அவரது சொந்த ஊர் ஆகும்.
லட்சுமிமேனன் சினிமாவில் நடித்துக் கொண்டே பள்ளிப்படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு பிளஸ்–1 படித்து முடித்தார். தற்போது பிளஸ் –2 பொதுத்தேர்வை பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மூலம் எழுதி வருகிறார். ஏப்ரல் 5–ந் தேதியுடன் தேர்வு முடிகிறது. மே மாத கடைசியில் ரிசல்ட் வெளிவருகிறது.
கொம்பன் படப்பிடிப்புக்கு இடையே லட்சுமிமேனன் பிளஸ் – 2 தேர்வுக்கான பாடங்களையும் தீவிரமாக படித்து வந்தார். பிளஸ் – 2 படித்து விட்டு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று லட்சுமி மேனன் தெரிவித்தார் என்றாலும் தொடர்ந்து நடிப்பேன்.
பாடுவதையும் நிறுத்த மாட்டேன் என்றார். இந்த விஷயத்தில் தனக்கு பெற்றோர் எந்த நிபந்தனையும் நெருக்கடியும் விதிப்பதில்லை என்றும் எந்த துறையை தேர்வு செய்வது என்பதை எனது முடிவுக்கே விட்டு விட்டனர் என்றும் தெரிவித்தார்.

தமிழ் புத்தாண்டில் களம் இறங்கும் தலதளபதி

தமிழ் புத்தாண்டில் களம் இறங்கும் தலதளபதி - Cineulagam
அஜித், விஜய் படங்கள் கடைசியாக ஜில்லா, வீரம் ஒரே நாளில் வந்தது. இந்நிலையில் மீண்டும் இருவரும் ஒரே நாளில் களம் இறங்கவுள்ளனர்.
ஆனால், இந்த முறை திரையரங்கில் இல்லை, சமூக வலைத்தளத்தில். ஆம், புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை முதல் நாள் தான் வரவிருக்கின்றது.
அன்றைய தினம் தான் அஜித்-சிவா படத்தின் பூஜை போடப்படுகிறது. மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தாலும் ஆச்சரியம் இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அப்பறம் என்ன? தலதளபதி ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டில் முதல் நாளே கொண்டாட்டம் தான்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More